Site icon Tamil News

ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி வழங்கிய மற்றுமோர் ஐரோப்பிய நாடு!

ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு எஸ்தோனியா அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்த சட்டத்திருத்தத்திற்கு அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (20.06) ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

திருமணச் சமத்துவத்தை அறிமுகப்படுத்த உதவும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்திற்கு 55 உறுப்பினர்களில் 34 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த சட்டம் 2024 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“அனைவருக்கும் தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ள உரிமை இருக்க வேண்டும். இந்த முடிவின் மூலம் நாங்கள் இறுதியாக  திருமண சமத்துவம் வழங்கப்பட்ட உலகின் மற்ற ஜனநாயக நாடுகளுக்கு இடையே அடியெடுத்து வைக்கிறோம் என அந்நாட்டின் பிரதமர் கல்லாஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version