Site icon Tamil News

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் – அதிர்ச்சியில் மக்கள்

நேபாளத்தில் நேற்று முன்தினம் இரவு 6.4 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் ஏற்பட்டதை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.

நேபாளத்தில் இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பால் இதுவரை 157-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 357 பேர் காயமடைந்துள்ளதாகவும், பல வீடுகள் மற்றும் பிற கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய பேரழிவுவில் இருந்து நேபாளம் இன்னும் மீளாமல் இருக்கும் நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே 169 கி.மீ ஆழத்தில் 10 கி.மீ தொலைவில் உள்ளதாகவும், ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது எனதேசிய மையம் தெரிவித்துள்ளது.

நேபாள பிரதமர் புஷ்ப் கமால் தஹால் நேற்று பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்தார். அவர் நிலைமையை ஆய்வு செய்தார். நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளதாகவும், தனது அரசு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.

நேபாள ராணுவம் மற்றும் ஆயுதமேந்திய போலீஸ் படை ஆகியோர் காயம் அடைந்த அனைவரையும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எங்களுடைய ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை நாங்கள் மீட்டுள்ளோம். இன்றும் நாளையும் செய்ய வேண்டிய பணிகளை எங்கள் அரசு செய்து வருகிறது என்று பிரதமர் பிரசாந்தா நேற்று கூறினார்.

Exit mobile version