Site icon Tamil News

ஜெர்மனி மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடி – அதிகரிக்கும் கட்டணம்

ஜெர்மனி மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் தொலைக்காட்சிகளுக்கு செலுத்தப்படும் கட்டணம் அதிகரிக்கப்படுகின்றது.

ஜெர்மனியில் அரச தொலைக்காட்சி நிறுவனங்களான ARA ZEF போன்ற அமைப்புக்களுக்கு மாதாந்தம் ஒரு கட்டணத்தை மக்கள் வழங்க வேண்டும்.

தற்பொழுது இந்த கட்டணமானது மாதாந்தம் 18 யுரோ 36 சென்ட் ஆக காணப்படுகின்றது.

இந்நிலையில் வெகு விரைவில் இந்த கட்டணமானது மாதாந்தம் 18 யூரோக்கள் 94 சென்ட் ஆக அதிகரிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அதாவது தற்பொழுது வருடம் ஒன்றுக்கு 220 யூரோக்கள் 32 சென்ட்க்கள் வழங்கப்படுவதாகவும், புதிய திட்டத்தின் அடிப்படையில் 222 யூரோக்கள் 28 சென்ட்க்கள் அறவிடப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குகின்ற KFF என்ற அமைப்பானது இந்த கணிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மாதாந்த கட்டண உயர்வு தொடர்பான மாநில முதல்வர்களுடைய முடிவே முக்கியமாக கருதப்படுகின்றது.

Exit mobile version