Site icon Tamil News

ஜெர்மனியில் அகதி கோரிக்கை முன்வைக்கின்றவர்களுக்கு காத்திருக்கும் மற்றுமொரு நெருக்கடி

Lஜெர்மனியில் அகதி கோரிக்கை முன்வைக்கின்றவர்களுக்கு புதிய நெருக்கடி உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளத.

அதற்கமைய, எதிர்வரும் காலங்களில் அகதி கோரிக்கை விடுப்பவர்களின் சமூக உதவி பணம் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் நாட்டினுள் ஒவ்வொரு வருடமும் பல அகதிகள் அகதி விண்ணப்பங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஐரோப்பிய நாடுகளின் ஊடாக வந்தவர்கள், ஐரோப்பிய நாட்டினுள் ஏற்கனவே அகதி விண்ணப்பம் மேற்கொண்டவர்களுக்கு குறைந்தளவு சமூக உதவி பணத்தை வழங்க வேண்டும் என்று ஜெர்மனியின் நிதி அமைச்சர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு குறைந்தளவு நிதியத்தை உதவி தொகையை குறிப்பிடப்பட்ட அகதிகளுக்கு வழங்குவதன் மூலம் அவர்களை ஜெர்மன் நாட்டை விட்டு அனுப்பும்பொழுது ஏற்படும் செலவுகளுக்கு இதை ஈடு செய்யமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு மட்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 1.05 மில்லியன் அகதிகள் வந்ததாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளது.

ஜெர்மன் நாட்டில் மட்டும் 329120 அகதிகள் வந்ததாகவும் தெரியவந்துள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஐரோப்பாவில் கூடுதலான அகதிகள் வந்த ஆண்டாக 2023 காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் ஜெர்மனியில் அகதிகள் கோரிக்கை முன்வைக்கின்றவர்களுக்கு சமூக உதவி பணம் குறைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version