Site icon Tamil News

ஒடிசா விபத்தில் உயிரிழந்தோரின் பிள்ளைகளுக்காக செவாக் வெளியிட்ட அறிவிப்பு

ஒடிசாவில் இடம்பெற்ற பாரிய ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் செவாக் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியாகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விரேந்தர் செவாக் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், “இந்த துயரமான நேரத்தில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வியை கவனித்துக்கொள்வதுதான் என்னால் செய்ய முடிந்தது. செவாக் இன்டர்நெஷனல் பள்ளியின் உறைவிட வசதியில் நான் அத்தகைய பிள்ளைகளுக்கு இலவச கல்வியை வழங்குகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஒடிசா தொடருந்து அனர்த்தத்தில் மரணித்தவர்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்டரெஸ் தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த அனர்த்தத்தில் 288 பேர் பலியானதுடன் 800க்கும் அதிகமானவர்கள் காயமடைந்த நிலையில், பலர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு தமது அனுதாபத்தை வெளியிட்டுள்ள அவர், சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய தாம் பிரார்த்திப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version