Site icon Tamil News

திருப்பதி ஏழுமலையானுக்குப் பிரசாதமாகப் படைக்கப்படும் லட்டில் விலங்கு கொழுப்பு

திருப்பதி ஏழுமலையானுக்குப் பிரசாதமாகப் படைக்கப்படும் லட்டில் விலங்கு கொழுப்பு கலந்து மகா பாவம் செய்துவிட்டதாக முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமணா குற்றம் சாட்டியுள்ளார்.

ஆந்திரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோயிலில் பெருமாளுக்கு படைக்கப்படும் லட்டு பிரசாதம், பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

கோயிலில் அமைந்திருக்கும் சமையலறையில் மிகவும் பாதுகாப்பான முறையில் லட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது.

பாரம்பரியமான முறையில், நெய், கற்கண்டு, அரிசி மாவு, கடலை மாவு, திராட்சை, முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் ஒரே சீரான அளவில் கலந்து தயாரிக்கப்படும் லட்டு உலக மகா பிரசித்தி பெற்றதாகும்.

இந்த நிலையில், திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு உள்ளிட்ட பொருள்கள் சேர்க்கப்பட்டிருப்பது எழுந்துவரும் சர்ச்சை மக்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் திருமலைக்கு விநியோகிக்கப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆய்வுக்கூடத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த நிறுவனத்தில நெய் வாங்குவது நிறுத்தப்பட்டு, கர்நாடக பால் கூட்டுறவு சங்கத்திடமிருந்து நெய் வாங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட தகவலால் தற்போது இந்த சர்ச்சை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஜூலை 23ம் தேதி லட்டு சுவையில் மாற்றம் இருப்பதாகப் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், தேங்காய் எண்ணெய், பருத்திக் கொட்டை, ஆளிவிரை, பலாக்கொட்டையிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்கள் கூட லட்டில் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Exit mobile version