Site icon Tamil News

இலங்கையில் மயக்க மருந்து பற்றாக்குறை – நெருக்கடியில் கொழும்பு தேசிய வைத்தியசாலை

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மயக்க மருந்து பற்றாக்குறையினால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

சத்திரசிகிச்சைகளை இரத்து செய்ய நேரிட்டதாக இன்று பிற்பகல் அறிவிக்கப்பட்டது.

Isoflurane மயக்க மருந்திற்கே தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் வைத்திய விநியோக பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரியவிடம் வினவியபோது, குறித்த மயக்க மருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவற்றை இன்றைய தினத்திற்குள் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மருந்துகளை விடுவிப்பதற்கான ஆவணங்களை இறக்குமதியாளர்கள் சமர்ப்பிக்காமையால், மருந்துகளை பகிர்ந்தளிப்பதில் தாமதம் நிலவுவதாக அவர் கூறினார்.

Exit mobile version