Tamil News

அமெரிக்காவில் இந்தியரொருவருக்கு ஆயுள் தண்டனை! வெளியான அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவில் மூன்று  சிறுவர்களைக் கொன்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவில்- கலிபோர்னியாவில் ‘டோர்பெல் டிட்ச்’ அடித்து விளையாடியதற்காக மூன்று சிறுவர்களைக் கொன்றதற்காகவும் மேலும் மூவரைக் காயப்படுத்தியதற்காகவும் 45 வயது நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த அனுராக் சந்திரா என்பவருக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவினரின் விசாரணையின்படி, சிறுவர்கள் விளையாட்டாக மோட்ஜெஸ்கா சம்மிட் சாலையில் உள்ள ஒரு வீட்டின் “டோர்பெல் டிட்ச்” ஒரு பையன் அடித்துவிட்டு மீண்டும் தங்கள் காருக்கு ஓடி மறைந்து விளையாடியுள்ளனர்.

வீட்டில் வசித்த சந்திரா, இதனால் கோபமடைந்து தனது சொந்த காரில் சிறுவர்களின் வாகனத்தை பின்தொடர்ந்தார்.

சந்திரா பின்தொடர்ந்தபோது, ​​இறுதியில், இரண்டு வாகனங்களும் ஸ்குவா மவுண்டன் சாலையை நெருங்கியதும், சந்திரா தனது வேகத்தை 99 மைல் வேகத்திற்கு அதிகரித்துள்ளார்.

பின்னர் வேண்டுமென்றே தனது காரை சிறுவர்கள் சென்ற காரின் பின்புறத்தில் மோதியுள்ளார். இதனால் கார் சாலையில் இருந்து விலகி மரத்தில் மோதியுள்ளது.

இதனால் விபத்தில் காரிலிருந்த 6 சிறுவர்களில் 16 வயதுடைய டேனியல் ஹாகின்ஸ், ஜேக்கப் இவாஸ்கு மற்றும் டிரேக் ரூயிஸ் ஆகிய 3 சிறுவர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். . 18, 14, 13 வயதுடைய மீதம் 3 பேர் காயத்துடன் உயிர்தப்பியுள்ளனர்.

கொலை வழக்கு தொடர்பாக சந்திரா ஜனவரி 20, 2020 அன்று கைது செய்யப்பட்டதிலிருந்து ரிவர்சைடில் உள்ள ராபர்ட் பிரெஸ்லி தடுப்பு மையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மேல் விசாரணை தீர்ப்பு கடந்த 14ஆம் திகதி வழங்கப்பட்டது.

ரிவர்ஸைட் கவுண்டி பகுதியின் நீதிமன்றத்தில், நடுவர் குழு குற்றவாளி என ஒருமித்த கருத்தை தெரிவித்தவுடன், சந்திராவிற்கு பரோலில் வெளி வர முடியாதபடி ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version