Site icon Tamil News

சோம்பேறித்தனத்தை விரட்ட இலகு வழிமுறை

சோம்பேறியாக இருந்தால் வாழ்வில் முன்னேற முடியாது என வாழ்வியல் ரீதியாக கூறப்படுகிறது. வாழ்க்கையில் ஒரே படியில் நிற்காமல் அடுத்தபடியை நோக்கி செல்வது மிக அவசியம். இதற்கு தடையாக இருப்பது சோம்பேறித்தனம் தான். அதை உடைத்தெரிந்தால் மட்டுமே நம்மால் வாழ்வில் வெற்றி பெற முடியும்.

அதிக வேலைப்பளு காரணமாக ஓய்வு எடுக்கலாம். ஆனால் எந்த ஒரு வேலையுமே செய்யாமல் ஒரு சிலர் ஓய்வு எடுப்பார்கள் அதுதான் சோம்பேறித்தனம்.

சோம்பேறித்தனம் நீங்க கடைபிடிக்க வேண்டியவை :

இந்த சோம்பேறித்தனம் உங்களுக்கு எதனால் வருகிறது என்று முதலில் ஆராய்ந்து பாருங்கள். ஒரு சிலருக்கு ரத்த சோகை இருந்தால் கூட ஒருவித சோம்பல் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அது போல் ஹார்மோன் குறைபாடு, அலைச்சல், ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது போன்ற காரணங்களால் ஏற்படும், முதலில் அதை சரி செய்து கொள்ள வேண்டும்.

சோம்பேறி தனத்துக்கு முதல் எதிரி அப்புறம் பாத்துக்கலாம் என்ற வார்த்தை தான். நாம் ஒரு செயலை செய்ய எண்ணும்போது அப்புறம் பாத்துக்கலாம் என்று நினைப்போம் அதற்கு முதலில் இடம் கொடுக்கக் கூடாது. “அன்றே செய், நன்றே செய், இன்றே செய்” என்ற பழமொழிக்கேற்ப நல்ல காரியங்களை அப்பொழுதே செய்ய வேண்டும்.

தூக்கமின்மை காரணமாக கூட ஒரு சிலருக்கு சோம்பேறித்தனம் வரும். இரவில் நல்ல தூக்கம் இருந்தால் மட்டுமே பகலில் நன்றாக வேலை செய்ய முடியும். அதனால் இரவில் போதுமான அளவு உறக்கம் தேவை. நாமே நம்மை மோட்டிவேஷன் செய்து கொள்ள வேண்டும்.

மேலும் நமக்கென்று ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அப்படி குறிக்கோள் வைத்து செயல்படும் போது சோம்பேறித்தனம் முற்றிலும் உங்களை விட்டு நீங்கிவிடும். இந்த சின்ன சின்ன வழிமுறைகளை மேற்கொண்டாலே நீங்கள் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வில் முன்னேற முடியும்.

Exit mobile version