Tamil News

அம்பானி குடும்பம் குடிக்கிற பால் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்திய பணக்காரர்களில் டாப் 5 லிஸ்டில் இருக்கும் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் பருகும் அரியவகை மாட்டின் பசும் பால் மற்றும் அதன் விபரங்கள் விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தினமும் சாதாரண மனிதர்கள் அருந்தும் பசும்பாலை விட, அம்பானி குடும்பத்தினர் அருந்தும் பசும்பால் மிகவும் ஸ்பெஷல் என்கிற தகவல்தான் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

ஹோல்ஸ்டீன்-ஃப்ரீசியன் (Holstein-Friesian breed) எனப்படும் அரியவகை மாட்டின் பாலை தான் அம்பானி குடும்பத்தினர் அருந்துகிறார்களாம். நெதர்லாந்தை பூர்வீகமாகக் கொண்ட இந்த வகை மாடுகள், கருப்பு மற்றும் வெள்ளை நிற புள்ளிகளுடனும், சிவப்பு மற்றும் வெள்ளை நிற புள்ளிகளுடனும் காணப்படுகின்றன.

இவை மிகவும் ஆரோக்கியமான மாடுகளாக பார்க்கப்படுகிறது. இவ்வகை மாடுகள் ஒரு நாளைக்கு 25 லிட்டர் வரை பால் கறக்கும் என கூறப்படுகிறது. மேலும் முகேஷ் அம்பானி குடும்பத்திற்காக பூனேவில் இருந்து பிரத்தேகயகமாக இந்த அரியவகை மாட்டின் பால் வர வைக்கப்படுகிறதாம்.

பூனேவில் உள்ள பண்ணையில் இவ்வகை பசுமாடுகள் சுமார் 3,000-திற்கும் மேல் வளர்க்கப்பட்டு வருவதாகவும், 35 ஏக்கர் பரப்பளவில் இந்த மாடுகள் மிகவும் தூய்மையாக வளர்க்கப்படுவதாகவும் கூறப்படுகின்றன. அதேபோல் இந்த மாடுகள் குடிக்க சுத்திகரிக்கப்பட்ட RO தண்ணீர் தான் கொடுக்கப்படுகிறதாம்.

அம்பானி குடும்பத்திற்கு மட்டுமின்றி, மும்பையில் உள்ள பல பாலிவுட் பிரபலங்கள் இவ்வகை மாட்டின் பசும்பாலை தான் விரும்பி குடிக்கிறார்களாம். சாதாரண பசு மாடுகளில் இருந்து கிடைக்கும் பால் ஒரு லிட்டர் 45 முதல் 50 ரூபாய் வரை சந்தையில் விற்கப்படும் நிலையில், இந்த மாடுகளின் பால் ஒரு லிட்டர் 152 ரூபாய் என கூறப்படுகிறது.

Exit mobile version