Tamil News

ஒரு வழியாக விடாமுயற்சிக்கு நாள் குறித்த படக்குழு…

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து தள்ளிப்போட்டு வந்தநிலையில் தற்போது ஒரு வழியாக படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ந் தேதி விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆக்ஸ்ட் மாதம் தொடங்கி மூன்றே மாதங்களில் இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் மகிழ் திருமேனி.

ஏனெனில் வருகிற நவம்பர் மாதம் நடிகர் அஜித் தன்னுடைய இரண்டாம் கட்ட உலக பைக் சுற்றுலாவை தொடங்க இருப்பதால் அதற்குள் இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட பிளான் செய்துள்ளனர்.

இதையடுத்து படத்தின் பின்னணி பணிகளை முடித்து படத்தை வருகிற 2024-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டு வர பிளான் போட்டுள்ளனர். அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் கண்டிப்பாக இப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது.

முதலில் இப்படத்தை விஜய்யின் லியோ படத்துக்கு போட்டியாக வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்கு தற்போது சாத்தியமில்லாததால், விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாக உள்ள தளபதி 68 படத்துக்கு போட்டியாக விடாமுயற்சி படத்தை திரைக்கு கொண்டு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

விஜய்யின் தளபதி 68 படப்பிடிப்பும் அடுத்த மாதம் தான் தொடங்கப்பட உள்ளதால், இரண்டு படங்களும் ஒன்றாக ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version