Tamil News

கிரிக்கெட் வீரரை சந்தித்து கேக்கெல்லாம் ஊட்டுறாரே தல…. ரசிகர்கள் ஆச்சரியம்

அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் மீண்டும் ஏப்ரல் 10ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என்று லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஜித் கேக் ஊட்டிவிடும் புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன.

குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கை ஜூனில் தொடங்குவதற்கு அஜித்குமார் திட்டமிட்டிருக்கிறாராம்.

இந்நிலையில் ஹைதராபாத்துக்கு சென்றார் அஜித். இதற்கிடையே தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.

அதனையொட்டி அஜித்தும், நடராஜனும் சந்தித்துக்கொண்டனர். அப்போது பிறந்தநாள் கேக்கை நடராஜனுக்கு அஜித் ஊட்டிவிட்டார். அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.

Exit mobile version