Site icon Tamil News

18 மாதங்களுக்கு பிறகு இங்கிலாந்தில் குறைவடைந்த பெற்றோல் விலை!

பிரித்தானியாவில் கடந்த 18  மாதங்களில் முதல் முறையாக பெற்றோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

RACயின் தகவல் படி, பெற்றோல் விலை சராசரியாக லிட்டருக்கு 145p கீழ் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டீசல் விலையும் குறைந்துள்ளது.

பெற்றோல் பம்ப்களில்,  பெட்ரோல் விலை 144.95p ஆகவும், டீசலுக்கு 154.31p ஆகவும் குறைந்துள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து மிகக் குறைந்த விலையாகும்.

ஜூலை 2022 இல், பெட்ரோல் விலை லிட்டருக்கு 192p மற்றும் டீசலுக்கு 199p என்ற சாதனை அளவை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version