Site icon Tamil News

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய உறுதிமொழி

புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு திரும்பிய பின்னர் பெருமையுடன் வாழக்கூடிய சூழல் கட்டியெழுப்பப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

குருநாகலில் இன்று இடம்பெற்ற  நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டிற்கு அன்னிய செலாவணியை ஈட்டித்தந்த அவர்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இது பெரும் பலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பங்களிப்பைப் பாராட்டும் வகையில், நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட  நிகழ்ச்சித்திட்டம் வடமேற்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன், குருநாகல், புத்தளம், அனுராதபுரம், மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டங்களில் இருந்து சுமார் 5,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் நடாத்தப்பட்ட நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ், புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதற்கு முன்மொழியப்பட்ட சுயதொழிலை ஆரம்பிக்க தேவையான நிதி மூலதனமாக தலா 50,000 ரூபாவையும் ஜனாதிபதி வழங்கினார்.

Exit mobile version