Site icon Tamil News

பெயரால் வந்த வினை : டிஸ்னிலேண்ட் புறப்பட தயாரான சிறுமிக்கு ஏற்பட்ட சிக்கல்!

டிஸ்னிலேண்டிற்கு விடுமுறையை கழிப்பதற்காக புறப்பட்ட சிறுமி ஒருவரின் கடவுச்சீட்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணமாக அவருடைய பெயர் குறிப்பிடப்படுகிறது. கேம் ஆஃப் த்ரோன்ஸ் கதாபாத்திரத்தின் பெயரால் அவர் அழைக்கப்படுவதால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கலீசி ஹோலோவேயின் தாயார், லூசி, தனது மகளின் பெயர் வர்த்தக முத்திரை விதிகளை மீறியதாகக் கூறப்பட்டதால், £2,000 பயணத்திற்கான திட்டங்களை நிறுத்த வேண்டியிருந்ததாக தெரிவித்துள்ளார்.

கலீசி என்ற பெயருக்கான வர்த்தக முத்திரையை வைத்திருப்பதால் வார்னர் பிரதர்ஸ் ஒப்புக்கொள்ளும் வரை தங்களால் பாஸ்போர்ட்டை வழங்க முடியாது என்று பாஸ்போர்ட் அலுவலகம் கூறியுள்ளது.

அதைப் பயன்படுத்த அனுமதி பெற அமெரிக்க திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு ஸ்டுடியோவைத் தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் லூசியிடம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், பாஸ்போர்ட் அலுவலகத்தை நடத்தும் உள்துறை அலுவலகம், தவறு நடந்துள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், தற்போது விண்ணப்பத்தை பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளது.

Exit mobile version