Site icon Tamil News

ஒடிசாவில் 800 ரூபாய்க்கு 8 மாத குழந்தையை விற்ற பழங்குடியின தாய்!

ஒடிசா மாநிலத்தில் வறுமையின் காரணமாக 8 மாதம் ஆன பெண் குழந்தையை 800 ரூபாய்க்கு பழங்குடியின பெண் விற்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ஜா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் கராமி முர்மு, இவரது கணவர் முசு, தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 ஆவதாக பெண்குழந்தை பிறந்துள்ளது.

வறுமையின் காரணமாக தாய் கராமி முர்மு, குழந்தையை இனி நாம் வளர்க்க முடியாது என நினைத்து குழந்தை இல்லாத தம்பதிக்கு 800 ரூபாய்க்கு விற்றுள்ளார்.

இதனையடுத்து, சொந்த ஊருக்கு திரும்பி வந்த முசு 2 ஆவதாக பிறந்த பெண் குழந்தையை பற்றி கேட்டுள்ளார். அதற்கு, குழந்தை இறந்துவிட்டதாக முர்மு கூறியுள்ளார்.ஆனால், சந்தேகமடைந்த முசு பொலிஸில் புகார் அளித்துள்ளார். 800 ரூபாய்க்கு 8 மாத குழந்தையை விற்றது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதன் பின்னர், தாய் முர்மு, குழந்தையை வாங்கிய தம்பதி, ஏற்பாடு செய்த நபர் உள்பட 4 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version