Site icon Tamil News

திருடப்படும் கையடக்க தொலைபேசிகளை தடுக்க Google எடுத்த அதிரடி நடவடிக்கை

திருடப்படும் Android கையடக்க தொலைபேசிகளை தானாகத் தடை செய்யும் புதிய அம்சத்தைப் பிரேசிலில் சோதிக்கவுள்ளது Google நிறுவனம்.

அதற்குச் செயற்கை நுண்ணறிவைக் கொண்ட புதிய அமைப்பை அது உருவாக்கியுள்ளது. பயனீட்டாளர்கள் ரகசியத் தகவல்களைக் கொண்ட செயலிகளை மறைத்து வைக்கலாம்.

அவற்றைப் பயன்படுத்த தனியாக ஒரு கடவுச்சொல்லைப் பொருத்தலாம். திருட்டைக் குறிக்கும் திடீர் அசைவுகளையும் அமைப்பு கண்டறியும் என குறிப்பிடப்படுகின்றது.

அப்போது கையடக்க தொலைபேசி திரை தானாகத் தடை செய்யப்படும். அந்தச் சேவைகள் பிரேசிலில் அடுத்த மாதம் நடப்புக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 2 கையடக்க தொலைபேசி திருடப்படுகின்றன.

2022ஆம் ஆண்டு சுமார் 1 மில்லியன் கைத்தொலைபேசி திருட்டுச் சம்பவங்கள் அங்குப் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version