Site icon Tamil News

சிங்கப்பூரில் நடந்த அதிரடி சோதனை – பெண்கள் உட்பட 62 பேர் கைது

சிங்கப்பூரில் நடந்த அதிரடி சோதனை நடவடிக்கையில் 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பலேஸ்டியர் சாலை, ஆர்ச்சர்ட் சாலை, தாம்சன் சாலை மற்றும் ரிவர் வேலி சாலை ஆகிய இடங்களில் அமைந்துள்ள பல்வேறு மசாஜ் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் அதிகாரிகள் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

கடந்த பிப்ரவரி 28 முதல் மார்ச் 2 வரை நான்கு நாள் நடந்த இந்த சோதனை நடவடிக்கையில் மொத்தம் 14 ஆண்கள் மற்றும் 48 பெண்கள் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர். அவர்கள் 21 முதல் 78 வயதுக்கு உட்பட்டவர்களாகும்.

இதில் பெண்கள் தொடர்பான குற்றச் சட்டத்தின்கீழ், 23 மற்றும் 46 வயதுக்கும் இடைப்பட்ட 22 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

பாலியல் சேவைகளை வழங்கியது, வெளிநாட்டு மனிதவளச் சட்டத்தின் (EFMA) கீழ் குற்றங்கள் செய்தது மற்றும் போதைப்பொருள் உள்ளிட்ட சந்தேக குற்றச் செயல்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Exit mobile version