Site icon Tamil News

கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகமாகும் அதிரடி அம்சம்

ஆண்ட்ராய்டு பயனர்கள் ஆப் இன்ஸ்டால் செய்ய கூகுள் பிளே ஸ்டோர் வசதி உள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு வேண்டிய ஆப்களை இன்ஸ்டால் செய்யலாம்.

அந்த வகையில் கூகுள் பிளே ஸ்டோர் தற்போது புதிய வசதி கொண்டு வருகிறது.

பொதுவாக கூகுள் பிளே ஸ்டோரில் ஆப் இன்ஸ்டால் செய்தால் ஓபன் அல்லது அன்இன்ஸ்டால் ஆப்ஷன் இருக்கும்.

தற்போது வரும் புதிய வசதியில் இந்த ஆப்ஷன்கள் இல்லாமல் ஆப் இன்ஸ்டால் கொடுத்தபின் நேரடியாக தானாகவே இன்ஸ்டால் ஆகும் படி ஆப்ஷன் அறிமுகம் செய்யப்படுகிறது.

கூகுள் பிளே ஸ்டார் v41.4.19-ன் APK டீர்டவுனைச் செய்த Android ஆணையத்தின் புதிய அறிக்கையின்படி, ‘ஆப் ஆட்டோ ஓபன்’ எனப் பெயரிடப்பட்ட புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தற்போது பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு வருகிறது.

APK டீர்டவுன் கூறுகையில், இந்த வசதியை பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் ஆன், ஆப்ஸ் செய்து கொள்ளலாம். இந்த ஆப் ஆட்டோ ஓபன் அம்சம் எப்போது அனைவருக்கும் வரும் என இன்னும் தகவல் இல்லை.

Exit mobile version