Site icon Tamil News

கீரி சம்பா அரிசியை பதுக்கியவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

கீரி சம்பா அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகார சபையினால் இன்று (02.09) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்த இடங்களும், சட்டவிரோதமாக அரிசியை பதுக்கி வைத்துள்ள இடங்களும் இனங்காணப்பட்டுள்ளன.

அவ்வாறு இனங்காணப்பட்ட இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆகஸ்ட் 02 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2278/02 இன் படி கீரி சம்பாவிற்கு அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாடளாவிய ரீதியில் உள்ளகடைகளில் கீரி சம்பா அரிசியை மறைத்து வைத்துள்ளதுடன், சில வர்த்தகர்கள்  கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் விற்பனை செய்து வருவதாகவும், நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Exit mobile version