Site icon Tamil News

பிரான்ஸ் வீதிகளில் கைவிடப்படும் நாய்கள் – அதிக செலவினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு

பிரான்ஸில் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு வீதிகளில் வளர்ப்பு செல்லப்பிராணிகள் கைவிடப்பட்ட நிலையில் நடமாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைவிடப்பட்ட விலங்குகளை பராமரிக்கும் அமைப்பான SPA இது தொடர்பில் கவலை தெரிவித்துள்ளது.

செல்லப்பிராணிகளுக்கான உணவு, பராமரிப்பு, மருத்துவச் செலவுகள் அதிகரிப்பினால் இந்த நிலை ஏற்பட்டு உள்ளதாக அறிய முடிகிறது.

2022ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2023ம் ஆண்டு வளர்ப்பு பிராணிகளின் செலவு 15% வீதத்தால் அதிகரித்துள்ளது.

Strasbourg நகரில் வசிக்கும் Georgette என்னும் பெண்மணி குறிப்பிடும் போது ‘ நான் நத்தாலி என்னும் எனது நாயை வீட்டில் ஒருவராக 10 ஆண்டுகள் வளர்த்து வருகிறேன்.

இன்று எனது வருமானம் ஓய்வூதியம் 600 யூரோக்கள் நத்தாலியின் செலவைச் செய்வதற்கு முடியாதுள்ளது SPAவில் கைவிடவும் எனக்கு மனம் இல்லை நல்லகாலமாக Strasbourg க்கில் இருக்கும் ஒரு தொண்டு நிறுவனம் இலவசமாக நாத்தாலிக்கான உணவை வழங்குவதால் தொடர்ந்தும் பராமரிக்க முடிகிறது ” என்கிறார்.

Exit mobile version