Site icon Tamil News

பிரான்சில் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் இளைஞர் எடுத்த தவறான முடிவு

யாழ்ப்பாணத்தில் இருந்து அகதி தஞ்சம் கோரி பிரான்ஸ் சென்ற நிலையில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸில் அகதி முகாமில் தங்கியிருந்த நிலையில் நேற்று முன்தினம் விபரீத முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த 33 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக முகாமில் தங்கியிருந்த நிலையில் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப்போர் காரணமாக ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகள், அகதி தஞ்சம் கோரும் இலங்கையர்ளுக்கு அடைகலம் வழங்கி வந்த நிலையில், போர் முடிவுக்கு வந்த பின்னர், இவ்வாறு செல்பவர்களின் புகலிட தஞ்சக் கோரிக்கைகளை வழங்காது இழுத்தடிப்பு செய்து வருகின்றன.

அங்கு சென்ற பின்னர் முகாம்களில் அடைக்கப்படும் அவர்களின் அகதி தஞ்ச கோரிக்கைகளும் அண்மைக்காலமாக நிராகரிக்கப்படுவருவதால் மன உளைச்சலுக்கு உள்ளாகி இவ்வாறு விபரீத முடிவால் உயிரிழக்கும் சம்பங்களும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version