Site icon Tamil News

இந்தியாவில் கோன் ஐஸ்கிரீம் கொள்வனவு செய்த பெண்ணுக்கு அதிர்ச்சி

இந்தியா – மும்பையின் மலாட் பகுதியில் கோன் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது துண்டிக்கப்பட்ட மனித விரல் ஒன்று இருப்பதை கண்டு பெண் மருத்துவர் ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

27 வயதான பெண் மருத்துவர், ஒன்லைனில் கோன் ஐஸ்கிரீம் ஒன்றை ஓர்டர் செய்துள்ளார்.

அப்போது அவர் கோன் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது துண்டிக்கப்பட்ட மனித விரல் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து அவர், உடனடியாக காவல்நிலையத்திற்கு ஐஸ்கீரிமுடன் சென்று புகார் அளித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கோன் ஐஸ்கிரீமில் இருந்தது மனித விரல் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, அதனை எப்.எஸ்.எல்.க்கு (தடயவியல்) பிரிவுக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.

அந்தப் பெண் மருத்துவர் ஐஸ்கிரீமில் பாதிக்கு மேல் சாப்பிட்டுள்ளார்.

அந்தநேரத்தில் ஏதோ ஒன்று வாயில் தட்டுப்படவே, ஐஸ்கிரீமில் துண்டிக்கப்பட்ட சுமார் 2 சென்றி மீட்டர் அளவான மனித விரல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தற்போது இந்த விவகாரத்தில் மலாட் காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், “மும்பையின் மலாட் பகுதியில், ஒன்லைனில் ஓர்டர் செய்த கோன் ஐஸ்கிரீம்க்குள் ஒரு மனித விரலின் துண்டை கண்டு ஒரு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதன்பிறகு அந்த பெண் உடனடியாக மலாட் காவல் நிலையத்தை அடைந்து புகார் அளித்துள்ளார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஐஸ்கீரீம் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்.

மேலும், அந்த ஐஸ்கிரீம் மற்றும் ஐஸ்கிரீமில் காணப்படும் மனித உடல் உறுப்பை FSL (Forensics)க்கு அனுப்பியுள்ளோம்” என்று தெரிவித்தனர்.

Exit mobile version