Site icon Tamil News

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் டெங்கு நோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் நேற்று கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதன்படி, அரச கட்டிடங்கள், பாடசாலைகள், மேலதிக வகுப்புகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் டெங்கு நோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு இடங்களில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கண்டி, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுப்புறச் சூழலை மிகவும் சுத்தமாக வைத்திருக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version