Site icon Tamil News

8 ஆண்டுகளின் பின் தைவானை உலுக்கிய சூறாவளி! 200 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

வலுவான சூறாவளி காரணமாக, தைவான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

“கைமி” என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி மணிக்கு 240 கிலோமீற்றர் வேகத்தில் தைவானுக்குள் நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தைவானை கடந்த 8 ஆண்டுகளில் தாக்கிய மிக வலிமையான சூறாவளியாக இது கருதப்படுகிறது.

ஏற்கனவே 2 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த சூறாவளி காரணமாக, அனைத்து உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன மற்றும் 200 க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

தைவான் அரசும் நேற்று சூறாவளி நாளாக அறிவித்திருந்தது.

இதன் காரணமாக வருடாந்தம் நடைபெறவிருந்த மிகப்பெரிய இராணுவப் பயிற்சியை இரத்து செய்ய அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Exit mobile version