Site icon Tamil News

பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினரின் வாகனம் அருகே தற்கொலை குண்டு தாக்குதல்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் செயல்படாத விமான நிலையத்திற்கு அருகே பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினரின் வாகனம் அருகே தற்கொலைப் படைத் தீவிரவாதி தன்னைத்தானே வெடிக்கச் செய்துள்ளார்,

வடக்கு வஜிரிஸ்தானின் எல்லையில் உள்ள பன்னு விமான நிலையம் அருகே வெடிகுண்டுதாரரின் உடலில் சுற்றியிருந்த வெடிபொருட்கள் பெரும் சத்தத்துடன் வெடித்தன.

இந்த தாக்குதலில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரி தெரிவித்தார்.

குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் அப்பகுதி முழுவதும் சுற்றி வளைத்தனர். குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய தேடுதல் வேட்டையும் தொடங்கப்பட்டது.

Exit mobile version