Site icon Tamil News

நிஜத்தில் ஒரு ஸ்பைடர் மேன் : 140 வருடங்கள் பழமையான பாலத்தின் மீது அசால்டாக ஏரிய நபர்!

36 வயதான மார்சின் பானோட், புவியீர்ப்பு விசையை மீறி ஏறுவதில் புகழ் பெற்றார். உதவியின்றி உலகின் மிக உயரமான கட்டிடங்களில் சிலவற்றை அசாதாரணமாக ஏரி சாதனை படைத்துள்ளார்.

போலந்து நாட்டில் பிறந்த பானோட், லண்டனில் உள்ள ஷார்ட் மற்றும் பாரிஸின் ஈபிள் டவர் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற அடையாளங்களின் உச்சிக்கு எவ்வித உதவி பொருட்களும் இன்றி ஏரி சாதனை புரிந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர், போர்ச்சுகலின் டோம் லூயிஸ் I பாலத்தின் மீது ஏரியுள்ளார். இது நாட்டின் தலைநகரான போர்டோவில் உள்ள டூரோ ஆற்றைக் கடக்கிறது.

அவர் 140 ஆண்டுகள் பழமையான கட்டமைப்பை மிக வேகமாக ஏரியுள்ளார். ஆற்றைக் கடக்கும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் அவர் மேலே வரும் வரை அவரைக் கவனிக்கவில்லை என்றே கூறுகின்றனர்.

ஏறுபவர் ஒரு கோபுரத்தின் உச்சியில் இருந்து வெளியே வருவதைப் படங்கள் காட்டுகின்றன. போர்டோ காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் அன்டோனியோ வீகா, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் வெளியிடப்பட்டபோதுதான் தங்களுக்குத் தெரியவந்தது எனக் கூறியுள்ளனர்.

 

Exit mobile version