Site icon Tamil News

ஜெர்மனி மக்களிடம் விசேட கோரிக்கை

ஜெர்மனியில் குடிசன மதிப்பீடு தொடர்பான புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பாக பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது சென்சஸ் என்று சொல்லப்படுகின்ற ஒரு அமைப்பானது இவ்வாறு ஜெர்மன் பிரஜைகளுக்கு கடிதம் மூலமாக விளக்கமளித்து இது தொடர்பாக தங்களது ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தது.

இந்நிலையில் தற்பொழுது சில மோசடிகாரர்கள் குறிப்பாக வுபெட்றா நகரத்தில் சென்சஸ் என்று சொல்லப்படுகின்ற அமைப்பின் ஊடாக கடிதங்களை அனுப்பி வருவதாகவும் அந்த கடிதங்களில் பொது மக்கள் தங்களது தரவுகளை வழங்க வேண்டும் என்று இவர்கள் இந்த கடிதங்களில் வேண்டியுள்ளதாக தெரியவந்து இருக்கின்றது.

பொது மக்கள் தங்களது தரவுகளை இந்த விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்வதன் மூலம் மோசடிகாரர்கள் பொதுமக்களின் தரவுகளை சேகரிக்க விரும்கின்றார்கள் என்றும், இதனடிப்படையில் பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று வுபெட்றா நகர நிர்வாகமானது எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு போலியான முறையில் சென்சஸ் என்ற அமைப்பின் ஊடாக அனுப்பப்படுகின்ற கடிதங்களில் இந்த சென்சஸ் என்ற அமைப்பின் விண்ணப்பங்களை நிரப்பாமல் விட்டால் 5000 யூரோ அறவிடப்படும் என போலியான எச்சரிக்கை விடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version