Site icon Tamil News

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்

ஆப்கானிஸ்தானில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

முதல் நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து 126 கி.மீ. தொலைவில் நள்ளிரவு 12.28 மணிக்கு 4.4 ரிக்டர் அளவிலும், இரண்டாவது நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில் நள்ளிரவு 12.55-க்கு 4.8 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை, உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் 12, அன்று, ரிக்டர் அளவுகோலில் 5.2 அளவுள்ள நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானைத் தாக்கியது.

அதற்கு முன், கடந்த ஆண்டு அக்டோபரில், மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்று அந்நாட்டின் தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version