Site icon Tamil News

பிரான்ஸின் புதிய பிரதமர் வழங்கிய வாக்குறுதி

பிரான்ஸில் அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு செயற்படுவதாக புதிய பிரதமர் Michel Barnier வாக்குறுதியளித்துள்ளார்.

பிரான்ஸின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள Michel Barnier சில முக்கிய தகவல்களை வெளியிட்டார்.

‘இது ஒரு கடினமான தருணம். முன்னோடியில்லாதது. இதற்கு முன்னர் நாம் அனைத்து கட்சியினரது கருத்துக்களையும் செவிமடுத்தது குறைவாகும்.

ஆனால் இனிமேல் அவ்வாறில்லை. அனைத்து கட்சிகளுடன் இணைந்தே நாம் பயணிக்க உள்ளோம். அனைத்து அரசியல் அழுத்தங்களையும் நான் மதிக்கிறேன்.” என அவர் தெரிவித்தார்.

‘இணைவரும் இணைந்து செயலில் இறங்கவேண்டிய தருணம் இதுவாகும். பேச்சுவார்த்தைகளுக்கு அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொள்ள நினைக்கிறேன் என மேலும் தெரிவித்தார்.

Exit mobile version