Site icon Tamil News

ஐரோப்பிய நாடொன்றில் கோடை விடுமுறைக்காக வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு சிக்கல்!

கோடை விடுமுறைக்காக வெளிநாடு செல்லும் பிரித்தானியர்கள் விமான நிலைய பாதுகாப்பு வரிசையில் தாமதங்களை எதிர்கொள்கின்றனர்.

போக்குவரத்து அமைச்சர் மார்க் ஹார்பர் கடைசி நிமிடத்தில் பயணிகளுக்கான விதிகளை மாற்றியதை அடுத்து, விமானத்துறை இது தொடர்பான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் திரவத்தின் 100 மில்லி என்ற வரம்பை மாற்றிய பின்னர் மக்கள் அரசாங்கத்தை சாடியுள்ளனர்.

UK விமான நிலையங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏர்போர்ட் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன், இந்த மறுஅறிமுகம், உச்ச நேரங்களில் பயணிகளுக்கு “நிச்சயமற்ற தன்மையை” ஏற்படுத்துகிறது எனக் கூறியுள்ளனர்.

அத்துடன்  விமான நிலையங்களுக்கு மாற்றியமைக்க குறுகிய அறிவிப்புகள் பற்றி கவலை தெரிவித்தது. அனைத்து விமான நிலையங்களிலும் இரண்டு லிட்டர் திரவங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கும் அதிநவீன ஸ்கேனர்களை நிறுவ வேண்டும் என்ற விதிமுறை உள்ளபோதிலும் ஹீத்ரோ, கேட்விக் மற்றும் மான்செஸ்டர் போன்ற முக்கிய மையங்கள் தளவாடச் சிக்கல்கள் காரணமாக ஜூன் 1 காலக்கெடுவை சந்திக்கத் தவறிவிட்டதாக பிபிசி தெரிவித்துள்ளது.

Exit mobile version