Tamil News

ஆலங்கட்டி மழையால் பாழான சுவிஸின் பிரபல சுவிஸ் சுற்றுலாத்தலம்

சுவிஸ் மாகாணமொன்றில் பெய்த ஆலங்கட்டி மழை, பிரபல சுற்றுலாத்தலங்களை சேதப்படுத்தியுள்ள நிலையிலும், அவற்றைப் பார்வையிடும் மக்களுடைய ஆர்வம் சற்றும் குறைந்தாற்போலில்லை.

சுவிட்சர்லாந்தில் செவ்வாய்க்கிழமை அடித்த புயலில் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில், Ticino மாகாணத்தின் Melide பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத்தலமும் ஒன்று.

Melide பகுதியில், சுவிட்சர்லாந்திலுள்ள பல கட்டிடங்கள், நினைவிடங்கள் ஆகியவை தத்ரூபமாக பொம்மைகளாக செய்யப்பட்டு ஒரு miniature அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.மொத்தம் 129 கட்டிடங்கள் அங்கு சிறு பொம்மைகளாக காணப்படுகின்றன. அந்த குட்டி சுவிட்சர்லாந்தைக் காண்பதற்காக ஏராளமான மக்கள் அங்கு கூடுவதுண்டு.

SWISSMINIATUR | Switzerland Tourism

இந்நிலையில், புயலின்போது பெய்த ஆலங்கட்டி மழையால் அந்த சிறு கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், Locarnoவிலுள்ள Piazza Grande மற்றும் Sion railway station ஆகியவற்றைப்போல உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

விடயம் என்னவென்றால், இப்படி அந்த அமைப்புகள் சேதமடைந்துள்ள நிலையிலும், அந்த அருங்காட்சியகம் மூடப்படவில்லை. மக்கள் அந்த அவ்வளவு அந்த miniature அருங்காட்சியகத்தைக் காண ஆர்வம் காட்டிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version