Site icon Tamil News

இலங்கையில் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ள பொலிஸ் குழு

இலங்கையில் பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு அமைய இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் உத்தரவுக்கமைய பொலிஸ் மா அதிபர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

இதனடிப்படையில், போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மற்றும் அமைச்சுக்கு அறிக்கை சமர்பிப்பதற்காக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மற்றும் பின்வரும் அதிகாரிகள் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் – மேல் மாகாணம் – தென்னகோன்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் – வட மாகாணம் – கே.பி.எம்.குணரத்ன

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் – தென் மாகாணம் – எஸ்.சி. மெதவத்த.

கட்டளை அதிகாரி – விசேட அதிரடிப்படை ஜெயசுந்தர.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் – குற்றப் புலனாய்வுத் திணைக்களம் – எஸ்.பி. ரணசிங்க.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் – போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் – ஒஷான் ஹேவாவிதாரண.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் – சிறப்பு பணியகம் – டி.சி.ஏ. திரு.தனபால.

பணிப்பாளர் – கொழும்பு குற்றப்பிரிவு – என். சில்வா.

Exit mobile version