Site icon Tamil News

பிரான்ஸில் நபர் ஒருவருக்கு கிடைத்த அதிஷ்டம் – ஒவ்வொரு மாதமும் 20,000 யூரோ

பிரான்ஸில் ஒவ்வொரு மாதமும் 20,000 யூரோக்கள் வழங்கும் அதிஷ்ட்டலாபச் சீட்டினை நபர் ஒருவர் வென்றுள்ளார்.

Eurodreams எனும் இந்த அதிஷ்ட்டலாபச் சீட்டினை பிரெஞ்சு நபர் ஒருவர் வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு அடுத்துவரும் 30 ஆண்டுகளுக்கு மாதம் 20,000 யூரோக்கள் வீதம் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட உள்ளது. மொத்தமாக அவர் தனது வாழ்நாளில் 7,200,000 யூரோக்கள் தொகையை பெற உள்ளார்.

9-10-12-14-20-31 ஆகிய இலக்கங்களும், numéro Dream என சொல்லப்படுகிற ஒற்றை அதிஷ்ட எண் ‘5’ ம் கொண்ட சீட்டுக்கே இந்த வெற்றித்தொகை வழங்கப்பட உள்ளது. வெற்றியாளரின் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

அதேவேளை, முதல் ஐந்து இலக்கங்களையும் சரியாக யூகித்த 56 பேருக்கு மாதம் 104 யூரோக்கள் வீதம் 30 ஆண்டுகளுக்கு வழங்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version