Site icon Tamil News

அமெரிக்க ஆன்மீக குரு டுரெக் வெரட்டை மணந்த நார்வே இளவரசி

நார்வே இளவரசி மார்தா லூயிஸ், அமெரிக்க ஆன்மீக குரு ஷாமன் டுரெக் வெரெட் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

52 வயதான நார்வே இளவரசி மார்த்தா லூயிஸ், “மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தவர்” என்று கூறிக்கொள்ளும் 49 வயதான ஷாமன் எனப்படும் ஆன்மீக குருவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

லூயிஸ் மற்றும் அவரது அமெரிக்க காதலர் டுரேக் வெரெட் ஆகியோர் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான ககேராங்கர் என்ற இடத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

வெரெட் என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஆன்மீக ஆலோசகர், இவரை பின்பற்றுவோரில் கவினேத் பேல்ட்ரோ மற்றும் அன்டோனியோ பந்தரஸ் போன்ற பிரபலங்கள் உள்ளனர்.

2020 ஆம் ஆண்டு வேனிட்டி ஃபேர் இதழுக்கு அளித்த பேட்டியில், டுரேக் தனது 28 வயதில் தான் இறந்ததாக பகிர்ந்து கொண்டார். அவர் காய்ச்சல், உறுப்பு செயலிழப்பு போன்ற பாதிப்பால் வெறும் நான்கு நிமிடங்கள் மரண நிலையை அடைந்து மீண்டதாக கூறி பரபரப்பை கிளப்பியவர்.

Exit mobile version