Site icon Tamil News

சீனாவில் பரவி வரும் புதிய வகை நிமோனியா வைரஸ்!

சீனாவில் கடந்த சில நாட்களாக அறியப்படாத புதிய நிமோனியா நோய் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெய்ஜிங், லியோனிங் மற்றும் பல நகரங்களில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வட சீனாவில் பரவி வரும் நோய் பற்றிய அனைத்து தகவல்களையும் வழங்குமாறு உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு அறிவித்துள்ளது.

நாட்டில் உள்ள சிறுவர்களிடையே இந்த நிலை பொதுவாக காணப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை 2019 ஆம் ஆண்டில், உலகின் முதல் அதிகாரப்பூர்வ கோவிட் நோயாளி சீனாவின் வுஹானில் இருந்து பதிவாகினார். இதனையடுத்து இந்த தொற்றானது  ஒரு உலகளாவிய தொற்றுநோயாக மாறியதுடன், இறப்பு எண்ணிக்கை 70 லட்சத்தை நெருங்குகிறது.

Exit mobile version