Site icon Tamil News

ஜெர்மனியில் பயன்பாட்டிற்கு வந்துள்ள புதிய நடைமுறை

ஜெர்மனியில்நீச்சல் குளங்களில் புதிய நடைமுறை ஒன்று பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

நீச்சல் குளங்களில் எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதனை கருத்திற் கொண்டு ஜெர்மனியில் புதிய நடைமுறை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உயிர்க்காப்பாளர் இருந்தாலும் அவரின் கவனம் எல்லா இடத்திலும் இருக்கும் என்று சொல்லமுடியாதென்பதனால் அதற்கும் தீர்வாக ஜெர்மனியில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வந்துவிட்டது.

முதல் முறையாக இந்த நடைமுறை மேற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் இடம்பெற்றுள்ளது.

தண்ணீரில் யாரும் தத்தளிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க விழிப்புநிலையில் உயிர்க்காப்பாளர்கள் செயற்படுவார்கள்.

எனினும் அவர்களுக்கு உதவியாக அதிநவீனக் கண்காணிப்புக் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. SwimEye எனும் இந்தத் தொழில்நுட்பம் தண்ணீரில் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தடுக்க உதவக்கூடியது.

குளத்தில் 7 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீந்த வரும் அனைவரின் அசைவுகளையும் பதிவுசெய்கின்றன. பதிவான காட்சிகளைக் கண்காணிக்க இந்த வசதி உதவுகின்றது.

வழக்கத்துக்கு மாறாக ஏதேனும் நடந்தால் உடனடியாக உயிர்க்காப்பாளரின் கைத்தொலைப்பேசிக்கே நேரடியாக எச்சரிக்கைத் தகவல் அனுப்பப்படும்.

இந்தக் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை நீந்த வருபவர்கள் பெரிதும் வரவேற்கின்றனர்.

SwimEye தொழில்நுட்பம் ஸ்கென்டினேவியா, சுவிட்ஸர்லந்து ஆகியவற்றில் ஏற்கனவே பயன்படுத்தப்படுகிறது. இப்போது அது ஜெர்மனியில் அறிமுகமாகியிருக்கிறது

Exit mobile version