Site icon Tamil News

Instagram பயன்படுத்தும் நபர்களுக்காக அறிமுகமாகும் புதிய அம்சம்

டீன் ஏஜ் பருவத்தினர் நள்ளிரவு நேரங்களில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசேஜ்களில் மூழ்கி இருப்பதைத் தடுப்பதற்காக Night time Nudge என்ற அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இப்போது எல்லாமே ஸ்மார்ட்போன் தான் என்ற நிலைக்கு உலகம் மாறிவிட்டது. காலையில் எழுந்திருக்கும்போது கையில் எடுக்கும் ஸ்மார்ட் ஃபோனை இரவு வரை கீழே வைக்காமல் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் என பல ஆப்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள். அதிலும் டீன் ஏஜ் பருவத்தினர் ஸ்மார்ட் ஃபோனுக்கு அடிமையாகி விட்டார்கள் என்றே சொல்லலாம். சமூக வலைதளங்கள் அவர்களிடமிருந்து பிரிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

பலர் இரவில் தங்களுடைய தூக்கத்தைத் தொலைத்து சமூக வலைதளங்களில் மூழ்கி உடல் நிலையை கெடுத்துக் கொள்கின்றனர். இந்த காலத்தில் எல்லாமே எளிதாகக் கிடைக்கும் தூரத்தில் இருப்பதால், டீன் ஏஜ் பருவத்தினர் இத்தகைய செயல்களுக்கு அடிமையாகின்றனர். இதை நாம் தவிர்க்க முடியாது என்றாலும் சில கட்டுப்பாடுகள் விதிப்பது மூலமாக இளைஞர்களை இந்த செல்போன் அடிமைத்தனத்திலிருந்து விடுபடச் செய்யலாம்.

இளைஞர்களின் இந்த அடிமைத்தனத்தை கவனித்த பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயல்களின் தாய் நிறுவனமான மெட்டா, நைட் டைம் நட்ஜ் என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதை பயன்படுத்துவது மூலமாக நள்ளிரவில் ஸ்மார்ட் போன் பயன்பாட்டைக் குறைக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த அம்சமானது நள்ளிரவு நேரங்களில் இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் பார்ப்பது மற்றும் மெசேஜ் செய்யும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை செயலியை விட்டு வெளியேறி தூங்குமாறு ரிமைண்ட் செய்யும்.

இந்த ரிமைண்டை ஆப் செய்யும் வரை பத்து நிமிடத்திற்கு ஒருமுறை வந்து கொண்டே இருக்கும். அதேபோல மெசஞ்சர் செயலிக்கு Parental Supervision என்று டூல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி பெற்றோர்கள் தங்களது டீனேஜ் பிள்ளைகள் மெசேஜ் ஆக்டிவிட்டி எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். அவர்கள் எப்போதெல்லாம் ஆன்லைன் வருகிறார்கள் என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க முடியும்.

ஆனால் இந்த அம்சம் தங்களது வயதை உறுதி செய்து இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் செயலியை பயன்படுத்தும் நபர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதுபோல இளைஞர்களை பாதிக்கும் பல அம்சங்களை மெட்டா நிறுவனம் கொண்டு வர இருக்கிறது.

 

Exit mobile version