Tamil News

சொகுசுக்கப்பலில் பயணித்த 300 பேருக்கு ஏற்பட்ட மர்ம நோய்

அமெரிக்க சொகுசு கப்பலில் பயணம் செய்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெப்ரவரி 26 முதல் மார்ச் 5 வரை டெக்சாஸில் இருந்து மெக்சிகோவிற்கு ரூபி பிரின்சஸ் என்ற சொகுசுக் கப்பலில் 2,991 பயணிகளும் 1,159 பணியாளர்களும் பயணித்துள்ளனர்.

அதில் பயணித்த 284 பயணிகளும், 34 பணியாளர்களும் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்

அவர்களுக்கு கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மைய அதிகாரிகள் கப்பலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

எனினும், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு எதனால் ஏற்பட்டது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன, மேலும் இது நோரா வைரஸால் ஏற்பட்ட தொற்று என நம்பப்படுகிறது.

Exit mobile version