Site icon Tamil News

மைதானத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது ஆர்.பிரேமதாச மைதானம் மற்றும் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்க இலங்கை கிரிக்கெட் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதாவது, மழையுடன் கூடிய காலநிலையில் போட்டியை நடத்துவதற்கு பணியாளர்கள் வழங்கிய அதிக பங்களிப்பை கணக்கில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, போட்டி ஒன்றின் ஒரு நாளுக்கான 3,000 ரூபா கொடுப்பனவை 6,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லிடா சில்வா தெரிவித்துள்ளார்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது இந்நாட்டில் உள்ள மைதானங்களில் பணியாற்றிய ஊழியர்கள் வழங்கிய உயர் பங்களிப்பு சர்வதேச ரீதியிலும் பாராட்டப்பட்டது.

அதன்படி, ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவர் பணிக்குழு சார்பில் 50,000 அமெரிக்க டொலர்களை வழங்கியதுடன், இறுதிப் போட்டியின் நாயகனாக களமிறங்கிய முகமது சிராஜுக்கு வழங்கப்பட்ட 5,000 அமெரிக்க டொலர்களும் வழங்கப்படும் என அறிவித்தார்.

ஆனால், அதற்கான பணம் அப்போது அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவர் வழங்கிய தொகை இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளால் பெறப்பட்டுள்ளதாகவும், மொஹமட் சிராஜ் நன்கொடையாக வழங்கிய தொகை எதிர்வரும் வாரத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கும் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, ஆசியக் கிண்ணப் போட்டியின் போது பிரேமதாச மைதானம் மற்றும் பல்லேகல மைதானத்தில் பணியாற்றிய அனைத்து மைதான ஊழியர்களுக்கும் இந்தப் பணத்தை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆசியக் கோப்பையின் போது இரண்டு மைதானங்களிலும் சுமார் 255 நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

ஒவ்வொரு பணியாளரின் பணி மூப்பு மற்றும் அந்தந்த போட்டிக்கான பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பணத்தை விநியோகிக்க கிரிக்கெட் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Exit mobile version