Site icon Tamil News

மக்ரோனின் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை

வாக்கெடுப்பின்றி சட்டம் நிறைவேற்ற பயன்படும் 49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தினை பயன்படுத்தி நேற்றைய தினம் தனது வரவுசெலவுத் திட்டத்தினை பிரதமர் Elisabeth Borne முன்வைத்தார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத மக்ரோனின் அரசாங்கம், இந்த சட்டத்தினை பயன்படுத்துவது இது 15 ஆவது தடவையாகும்.

அதையடுத்து, RN ம்ற்றும் La France insoumise ஆகிய கட்சிகள் மக்ரோனின் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை (motions de censure) கொண்டுவந்திருந்தனர்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை பகுதி பகுதியாக பாராளுமன்றத்தில் பிரதமர் சமர்ப்பித்து வருகிறார். தற்போது சமூக பாதுகாப்புக்கான வரவுசெலவுத் திட்டத்தினை (budget de la Sécurité sociale) சமர்ப்பித்து வருகிறார்.

 

Exit mobile version