Site icon Tamil News

ஜூலை மாதம் மோடி-புடின் சந்திப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை மாதம் ரஷ்யாவுக்குச் செல்லவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மார்ச் மாதம், இந்தியப் பிரதமருக்கு ரஷ்யாவுக்கு வருமாறு பகிரங்க அழைப்பை விடுத்ததாக ரஷ்யா தெரிவித்திருந்தது.

அதன்படி, வரும் ஜூலை மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கு பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும், அதற்கு ரஷ்ய அரசு தயாராகி வருவதாகவும் அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version