Site icon Tamil News

பிரான்ஸில் வங்கிக்கு பணம் எடுத்து சென்றவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கும்பல்

பிரான்ஸில் பணம் எடுத்துச் செல்லும் கவச வாகனம் ஒன்றை ஆயுதமுனையில் கொள்ளையிடும் முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

Val-de-Marne மாவட்டத்தில் வங்கியின் முன்பாக நின்றிருந்த கவச வாகனம் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

BCP வங்கியின் முன்பாக நின்றிருந்த கவச வாகனம் ஒன்றை, ஆயுததாரிகள் சிலர் காலை 6 மணி அளவில் சுற்றிவளைத்தனர்.

இச்சம்பவத்தை அடுத்து, அவசர கால சமிக்ஞை ஒலி எழுப்பட்டு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

பொலிஸார் வருவதை அறிந்த கொள்ளையர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனால் கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்தது.

Exit mobile version