Site icon Tamil News

இந்தோனேஷியாவில் இன்று 5.9 ரிக்டர் அளவுகோலில் பதிவான பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் இன்று அதிகாலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடற்கரையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானதாக இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் பெரிய அலைகளை உருவாக்கவில்லை என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 12:01 மணியளவில் தலாட் தீவுகளின் வடமேற்கே 41 கிமீ தொலைவில் கடலுக்கு அடியில் 32 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தீவு நாடான இந்தோனேசியா அடிக்கடி நிலஅதிர்வு ஏற்படும் “பசிபிக் நெருப்பு வளையத்தில்” அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version