Site icon Tamil News

ரஷ்யா ஆசைக்காட்டி மாணவர்களிடம் பணம் பறித்த நபர் ஒருவர் கைது

ரஷ்யாவில் உயர் கல்வி தருவதாக கூறி மாணவர்களை சுற்றுலா விசாவில் அழைத்து சென்று அவர்களிடம் இருந்து பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு விஷேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வத்தளை, ஹுனுபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவில் உயர் கல்விக்காக கட்டான பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரை ஏமாற்றி மோசடி செய்த சந்தேக நபர் தொடர்பில் நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

சந்தேக நபருக்கு எதிராக மாத்தறை தலைமையக பொலிஸில் 17 முறைப்பாடுகளும், குருநாகல் பொலிஸில் 03 முறைப்பாடுகளும், குளியாப்பிட்டிய பொலிஸில் 02 முறைப்பாடுகளும், நாரஹேன்பிட்டி பொலிஸில் ஒரு முறைப்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி வாதுவ, அம்பாறை, மொரட்டுவ பொலிஸாரிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

சந்தேகநபர் ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்ற மாணவனை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்  நாட்டுக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version