Site icon Tamil News

தைவானின் புதிய ஜனாதிபதியிடம் இருந்து சீனாவுக்கு முக்கிய கோரிக்கை

தைவானின் புதிய ஜனாதிபதி வில்லியம் லாய், சீனாவை ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து, தைவானை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை  பதவியேற்ற பின்னர், சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான மோதலை ஒரு உரையாடலாக மாற்ற சீனாவிடம் அவர் முன்மொழிந்திருந்தார்.

தைவான் நெடுங்காலமாக நாட்டிற்கு சொந்தமான தீவு என்று கூறியுள்ள தைவானின் புதிய ஜனாதிபதி, சீனாவின் அழுத்தங்களுக்கு ஒரு போதும் தயங்கப் போவதில்லை என வலியுறுத்தியுள்ளார்.

எனினும், தைவான் அதிபரின் இந்த கோரிக்கைக்கு சீனாவிடம் இருந்து நல்ல பதில் கிடைக்காததால், தைவான் சுதந்திர நாடாக மாறுவது முட்டுச்சந்தான போராகவே அமையும் என தெரிவித்துள்ளனர்.

தைவானின் புதிய ஜனாதிபதி வில்லியம் லாய் மற்றும் அவரது ஜனநாயக முற்போக்குக் கட்சி (DPP), சீனாவை ஒரு எதிரியாகக் கருதுகின்றனர்.

அத்துடன்,  ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து தைவானின் கடல் மற்றும் வான்வெளியைச் சுற்றி இராணுவ ஊடுருவல்களை முடுக்கிவிட்டுள்ளனர்.

Exit mobile version