Site icon Tamil News

ஹமாஸ்-இஸ்ரேல் மோதலுக்கு நடுவே நடந்த நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம்

ஹமாஸ்-இஸ்ரேல் மோதலுக்கு நடுவே நடந்த மற்றொரு முக்கியமான சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

10 மாத இரட்டைக் குழந்தைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

யுத்த மோதல்கள் காரணமாக உயிரிழந்த நிராயுதபாணிகளில் இந்த இரண்டு குழந்தைகளின் பெற்றோரும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹமாஸ் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலை நடத்திய போது இந்த குழந்தைகள் பெற்றோருடன் தங்கியிருந்த வீடும் தாக்கப்பட்டது.

அங்கு ஹமாஸ் போராளிகள் வீட்டின் முன்பக்க கதவை உடைக்க முற்பட்ட போது, ​​உடனடியாக சிசுக்களின் தாயும் தந்தையும் நடவடிக்கை எடுத்து இரண்டு குழந்தைகளையும் வீட்டில் உள்ள இரகசிய இடத்தில் மறைத்து வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திடீரென வீட்டிற்குள் நுழைந்த ஹமாஸ் போராளிகளால் பெற்றோர்கள் இருவரும் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 14 மணி நேரத்துக்குப் பிறகு, மீட்புக் குழுவினர் வீட்டைச் சோதித்தபோது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு குழந்தைகளைக் கண்டனர்.

கீறல் கூட படாத குழந்தைகளை மீட்பு குழுவினர் மீட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சிசுக்களை அவர்களது பாட்டியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version