Site icon Tamil News

அமெரிக்க-தென்கொரிய ராணுவ தொழில்நுட்பங்களை திருடிய வடகொரியாவின் ஹேக்கர்கள் குழு

அமெரிக்கா ராணுவத்துடன் இணைந்து தென்கொரியா ராணுவம் அவ்வப்போது கூட்டுப்போர் பயிற்சிகள், ராணுவ நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபடுகிறது. இதற்காக ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள அமெரிக்க ராணுவம் தென்கொரியாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தோடு ஒப்பந்தமிட்டுள்ளது.

இந்த நிறுவனமானது இருநாடுகளுக்கும் உகந்த வகையில் ராணுவ பயிற்சிக்கு தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. இந்தநிலையில் அங்கு பணிபுரியும் நிறுவன ஊழியர்கள் சிலருக்கு இ-மெயில் வழியாக குறுஞ்செய்தி ஒன்று வந்தது.

இதன் மூலம் அந்த நிறுவனத்தின் தரவுகள், அறிக்கைகள் ஆகியவை திருடப்பட்டதாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் புலனாய்வு பொலிஸார் விசாரித்தனர். இதில் இந்த சைபர் ஊடுருவலுக்கு காரணமாக ‘கிமுசுகி’ என்னும் ஹேக்கர் கும்பல் இருந்தது தெரிந்தது.

வடகொரியாவை சேர்ந்த இந்த ஹேக்கர்கள் குழு இதற்குமுன்பும் தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா மீது சைபர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சமூக ஊடுருவல் குறித்து அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட உள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Exit mobile version