Site icon Tamil News

பொத்துவில் பகுதியில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழப்பு!

பொத்துவில் சங்கமன்கந்த பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த வெளிநாட்டு பிரஜை இன்று (15.03) காலை சங்கமன்கந்த மணச்சேனி காட்டுப் பகுதியில் காட்டு யானைகளால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் 50 வயதுடைய இத்தாலியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அவர் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மெதவாச்சி, லிடவாவ பகுதியில் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி 61 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்த போதே அவர் இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version