Site icon Tamil News

காஸாவில் மிதக்கும் பாலம் – வேகமாக கட்டி முடித்த அமெரிக்கா

காஸா கடலில் மிதக்கும் பாலம் ஒன்றை அமெரிக்கா கட்டி முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடல் மார்க்கமாக நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்ல, இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க ராணுவ வீரர்களை நேரடியாக ஈடுபடுத்தாமல், இஸ்ரேல் ராணுவ பொறியாளர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் மூலம் மிதக்கும் பாலத்தை கட்டி முடித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனர்களுக்கு உணவு பொருட்களை எடுத்து செல்லும் லொரிகளை இஸ்ரேலியர்கள் தடுத்து நிறுத்திவிடுவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டது.

இரண்டாயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் இந்த மிதக்கும் பாலத்தை கட்டியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Exit mobile version